இந்திய டாப் 10 தலைவர்களில் மு.க.ஸ்டாலின்: பெருமைமிகு காரணங்கள்…

ந்தியாவின் அதிகாரமிக்க தலைவர்களின் டாப் 10 பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். அவர் பாஜக-வுக்கு எவ்வாறு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதில் தொடங்கி அவரது அரசின் செயல்பாடுகள் வரை பகுப்பாய்வு செய்து, அவருக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக பட்டியலை வெளியிட்டுள்ள ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் மோடி

இந்த பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடியும், 2 ஆவது இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 3 ஆவது இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, 4 ஆவது இடத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, 5 ஆவது இடத்தில் சந்திரபாபு நாயுடு ஆகியோர் உள்ளனர். 6 ஆவது இடத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 7 ஆவது இடத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இடம்பெற்றுள்ளனர்.

8 ஆவது இடத்தில் மு.க. ஸ்டாலின்

8 ஆவது இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 ஆவது இடத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 10 ஆவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

பெருமைமிகு காரணங்கள்…

இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 8 ஆவது இடம் அளித்ததற்கான காரணங்கள் என்ன என்பதை ‘இந்தியா டுடே’ பட்டியலிட்டுள்ளது.
அதில், “மொழித் தடையால் ஸ்டாலினின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருந்தாலும், தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தை எட்டுகிறது. திமுக-வுக்கு மக்களவையில் 22 எம்.பி-க்கள், மாநிலங்களவையில் 10 எம்.பி-க்கள் உள்ளதோடு, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ‘இந்தியா கூட்டணி’ வெற்றி வகை சூடியுள்ளது.

எல்லா மாநிலங்களிலும் பாஜக சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட கிடைக்காமல் செய்தது பாஜக-வுக்கு அதிக வருத்தத்தை அளித்தது. எனவே, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு மு.க. ஸ்டாலின் எஃகு போல திகழ்கிறார். 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதில் இருந்து, 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா என கேட்டால், தந்தை கருணாநிதியை போல் ‘எனக்கு என் உயரம் தெரியும்’ என அடக்கமான போர் வீரனை போல் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மத்திய அரசுக்கு கொடுத்துள்ள ஆதரவு மூலம் அதிகாரமிக்க நபர்களாக உள்ளனர். மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும் பாஜகவின் நுழைவை தடுத்துள்ளனர் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Is working on in app games !. 台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Raptors, wizards aim to halt slides.