மஞ்சள் அணி இல்லாத IPL லா…’தல’ தோனி இல்லாத CSK-வா? – அணி விவரம்!
18 ஆவது ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக் கொண்டதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலமாக செயல்பட்ட தோனி, கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த சீசனே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என ரசிகர்கள் நினைத்து இருந்தனர்.
இந்த நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே டீம் மட்டுமல்லாது ஐபிஎல் விளையாட்டே தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘டல்’ அடித்துவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டும் ‘தல’ தோனியும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடக்கிறது என்றால் கேலரியே ‘மஞ்சள்’ வண்ணமயமாகிவிடும். கூடவே ஆடுகளத்தில் ‘தல’ தோனி இறங்கி சிக்சரோ ஃபோரோ விளாசினால்… அவ்வளவு தான், ரசிகர்களின் ஆரவாரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்துக்கும் அளவே இருக்காது.
இந்த த்ரிலிங்கை நேரடியாக அனுபவிப்பதற்காக தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கினால், சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவிடுவார்கள்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தொடங்கும் 18 ஆவது ஐ.பி.எல் தொடரில் தோனி இடம்பெறுவரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிய நிலையில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக் கொண்டதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அந்த அணி தக்கவைத்துக் கொண்டுள்ள அணி வீரர்கள் பட்டியலில் தோனி உடன் ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரானா,ஷிவம் துபே,வீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
மற்ற அணி வீரர்கள் விவரம் வருமாறு…
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி, ரஜத் படிதார், யஷ் தயாள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட்
குஜராத் டைட்டன்ஸ்
ரஷித் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் டெவாடியா, ஷாருக்கான்
பஞ்சாப் கிங்ஸ்
ஷஷாங்க் சிங் , பிரப்சிம்ரன் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் , துருவ் ஜூரல், ஹெட்மயர், சந்தீப் சர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி
டெல்லி கேப்பிட்டல்ஸ்
அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்