கனமழை பாதிப்பிலிருந்து சென்னை துரிதமாக மீண்டது எப்படி?

மிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், பாதிப்பு நிலை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தும், நீர் தேக்கம், மின் வெட்டு போன்ற இடர்பாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நேற்று இரவு வரை விட்டுவிட்டு தொடர்ந்து கனமழை பெய்தும், தாழ்வான பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பாதிப்பிலிருந்து சென்னை துரிதமாக மீண்டது. இது சாத்தியமானது எப்படி..?

இது குறித்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,“கடந்த ஆண்டு அனுபவத்தின் காரணமாக 990 மின்மோட்டார்கள் வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.கடந்த 3 ஆண்டுகளில் 750 கிலோமீட்டர் மழை நீர் வடிகால் கட்டப்பட்டதால் தான் தற்போது மழை நீர் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது.

சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஆவடி ,மங்காடு தாம்பரம் என அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.எங்குமே தண்ணீர் தேங்கி நிற்கவில்லை.மேலும், கனமழையினையும் பொருட்படுத்தாது, சென்னையின் பல பகுதிகளில் முன்களப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கால் படாத இடமே இல்லை என்ற அளவிற்கு சென்னை முழுக்க ஆய்வு செய்துவிட்டு, திருவள்ளூரிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இது போன்ற துரித நடவடிக்கைகளால், கடுமையான கழை பதிவாகிய நிலையிலும், அச்சப்பட தேவையில்லாத சூழல் நீடிக்கிறது” என்றார்.

இந்த நிலையில், தமிழக அரசு இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியின் 21 ஆயிரம் தகளப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொண்டனர்.

சென்னையில் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட 3 சுரங்கப்பாதைகளும் மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சாலைகளில் விழுந்த 67 மரங்கள் அகற்றப்பட்டு, அங்கு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.

சென்னையில் நேற்று (அக். 15) 131 மி.மீ அளவில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பொழிந்தும் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.

ருவமழையினை எதிர்கொள்ள 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ழைநீர் தேங்கிய 542 இடங்களில் 412 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

நேற்று 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று காலை உணவு ஆயிரம் நபர்களுக்கும், மதிய உணவு 45 ஆயிரத்து 250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும், இன்று காலை உணவு 4,16,000 நபர்களுக்கும் என மொத்தம் 7,18,885 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Wees de eerste om “thermische versnipperaar maestro land eliet” te beoordelen. Raison sociale : etablissements michel berger.