Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

2021 முதல் 24 வரையிலான கலைச்செம்மல் விருதுகள் யாருக்கு?

வியம் மற்றும் சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் கலைச்செம்மல் விருதுகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

ஆண்டுக்கு 6 கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களது சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் கலைச்செம்மல் விருதும் தலா ரூ.1,00,000/- பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2021-2022 முதல் 2023-2024 வரையிலான மூன்று வருடங்களுக்கு 18 கலைஞர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மரபுவழி ஓவியம் பிரிவில் ஓவியர் ராமு (எ) எஸ்.எஸ்.ராமதாஸ், மணியம் செல்வன், ஏ.ராஜமோகன், வாசுகி லஷ்மி நாராயணன், சோ.வேல்முருகன் (கோவில் பட்டி, தூத்துக்குடி) ஆகியோரும் மரபுவழி சிற்பம் பிரிவில் இரா.செல்வநாதன் ஸ்தபதி, முனைவர் கி.ராஜேந்திரன், உலோக சிற்பக்கலைஞர் இரா.ரவீந்திரன், மர சிற்பக்கலைஞர் க.பால்ராஜ் (சிவகங்கை) ஆகியோரும் நவீன ஓவியம் பிரிவில் அ.விஸ்வம், கோ.சுப்பிரமணியம், எஸ்.வி.பிரபுராம், எஸ்.அருணகிரி, கே.புகழேந்தி, அதிவீரராம பாண்டியன், நவீன சிற்பம் பிரிவில் ந.கருணாமூர்த்தி , டி.விஜயவேலு, ஹேமலதா ஆகியோரும் கலைச்செம்மல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வருகிற 5ம் தேதியன்று சென்னை அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version