Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

வறியோரின் முனைவர் படிப்பை சாத்தியமாக்கும் அரசு!

மூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடையச் செய்ய தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களைச் சுய சார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்களை ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

அரசு கைகொடுப்பதால், இன்றைக்கு ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் முனைவர் படிப்பு வரை எளிதாக படித்து, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில், 2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆதிதிராவிடர் நல இயக்குநர் இயக்குநர் அறிவித்துள்ளார்.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவத்தை www.tn.gov.in/forms/deptname/1 என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது.

முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 மாலை 5.45 மணிக்குள்,“இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version