பொதுப் போக்குவரத்துடன் பின்னிப்பிணைந்த ‘அசோக் லேலண்ட்’!

தமிழ்நாடு அரசின் பொதுப் போக்குவரத்து அமைப்பு இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் போல உள்ளடங்கிய பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ள மாநிலத்தை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்க முடியாது. அதிலும் சமீபத்தில் அறிமுகமான பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து திட்டமும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமான தனிச்சிறப்பான திட்டமாகும்.
தமிழ்நாடு அரசு எப்போதுமே அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்துதான் பேருந்துகளைக் கொள்முதல் செய்யும். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் அசோக் லேலண்ட் பேருந்துகள்தான்.

இப்போது அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு புதிதாக 1,666 பேருந்துகள் வாங்குகிறது. இதன் மதிப்பு ரூ. 371 கோடியே 16 லட்சம். இந்தப் புதிய ஆர்டரையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் ஓடும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை 19 ஆயிரமாக மாறும்.
அசோக் லேலண்ட்டின் பேருந்துகள், பிரதானமாக கவனத்தில் வைத்திருப்பது பயணிகளின் வசதியைத்தான் என்கிறார்கள். அதனுடைய என்ஜின் igen6 BS-VI என்ற நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது. அதன் வசதிகளைப் பார்க்கும் போது விலை குறைவு. அதனால்தான் தமிழ்நாடு அரசு எப்போதுமே அசோக் லேலண்ட்டைத் தேர்வு செய்கிறது என்கிறார்கள்.