பரோட்டா ருசியாக இருப்பதனாலும், விலை மலிவாக இருப்பதனாலும் பெரும்பாலான மக்கள் பரோட்டாவையே விரும்புகிறார்கள். பரோட்டா சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு அதிக அளவில் வந்துகொண்டிருந்தாலும் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் அது வேலை செய்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய, அந்த மருந்தை மனிதர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னர் விலங்குகளுக்கு, குறிப்பாக எலி, முயல் போன்றவற்றுக்கு கொடுப்பார்கள். எந்த நோய்க்கான மருந்தைக் கண்டு பிடித்திருக்கிறார்களோ அந்த நோய் குறிப்பிட்ட விலங்குக்கு இருக்கவேண்டும். அல்லது அந்த நோயை வரவைப்பார்கள். அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைக் கொடுத்ததும் நோய் குணமாகிறதா இல்லையா என்பது தெரியவரும்.
அப்படி ஒரு விலங்குக்கு சர்க்கையை நோயை ஏற்படுத்த, அலோக்சன் என்கிற வேதிப்பொருள் கொடுக்கப்படுகிறது. அந்த வேதிப்பொருள் கொடுக்கப்பட்டவுடன் விலங்குக்கு சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. அதற்காக பயன்படுத்தப்படும் ‘அலோக்சன் வேதிப்பொருள்’ மைதாவில் சேர்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் நான்கு வகையான சத்துகள் இருக்கவேண்டும். 1. கார்போஹைட்ரேட் 2. கொழுப்பு 3. புரோட்டீன் 4. நார்சத்து. ஆனால் பரோட்டாவில் கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் மட்டும்தான் இருக்கின்றன.
இது தவிரப் பரோட்டா சாப்பிடுவதனால் உடலுறுப்பில் பல வித நோய்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் பரோட்டா பிரியர்கள் பரோட்டா உண்பதைக் குறைத்தே தீர வேண்டும்.