நெருங்கும் பண்டிகைகள்… புதிய வகை பீர் அறிமுகம்!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில், பீர் பிரியர்களுக்காக டாஸ்மாக் நிறுவனம், புதிய வகை பீர் வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் மற்றும் பீர் போன்றவற்றை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் இக்கடைகளில் புழக்கத்தில் உள்ளன.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் தற்போது புதிய வகை பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த பீர், விரைவில் விற்பனைக்கு வருகிறது. ‘பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற பெயரில் விற்கப்பட உள்ள இந்த பீர், 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.

சிறிய வகை ‘டின்’களிலும் ‘பிரிட்டிஷ் எம்பயர்’ பீர்கிடைக்கும். இந்த பீர் சில நாட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ‘சூப்பர் ஸ்ட்ராங் பீர்’ என்ற புதிய தயாரிப்பு, பீர் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது.

650 மி.லி முழு பாட்டிலின் விலை ரூ.200. 325 மி.லி. அரை பாட்டில் விலை ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Collaboration specifically promotes the pimax crystal light headset. The real housewives of beverly hills 14 reunion preview. Dprd kota batam.