Amazing Tamilnadu – Tamil News Updates

சேலம்: ‘Walking’லேயே வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின் ( புகைப்பட தொகுப்பு)

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தான் தேர்தல் பிரசாரம் செல்லும் ஊர்களுக்கு முந்தைய தினம் இரவே சென்று தங்கினால், மறுதினம் காலையில் அந்த ஊரில் உள்ள முக்கிய கடை வீதிகள், மார்க்கெட்டுகள், பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களுக்கு நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது, அங்கு வரும் மக்களிடையே அவர் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

கூடவே தான் சந்திக்கும் மக்களிடம் அவர்களது குறைகளைக் கேட்பது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்ற அரசு திட்டங்களின் பயன்கள் உரியமுறையில் வந்து சேருகிறதா என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அவர்களுடன் உரையாடுகிறார். மக்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில், தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.

அப்படித்தான், சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலையில் சேலம் முதல் அக்ரஹாரம் மற்றும் கடை வீதிகளில் நடைப்பயிற்சியை மேற்கொண்டவாறே, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தேநீர் கடையில் கட்சியினருடன் தேநீர் அருந்தினார். வழிநெடுகிலும் பொது மக்கள் அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் புகைப்படங்கள் கீழே…

Exit mobile version