திமுக தேர்தல் அறிக்கை: கல்லூரி மாணவர்களுக்கு சிம்கார்டு இலவசம்; மத்திய அரசுப் பணிகளில் மாநிலத்தவருக்கே முன்னுரிமை!

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு, வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கலும் இன்று தொடங்கி மார்ச் 27 வரை நடக்கிறது.

இந்த நிலையில், திமுக தரப்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட நிலையில், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையில் ,மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும் என்றும், மத்திய அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும். ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

ச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.

வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை அபராதம் நீக்கப்படும்

மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். ஒன்றிய அரசு அமைப்புகள் தன்னாட்சியுடன் செயல்பட உறுதி செய்யப்படும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து.

வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு

ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும். இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டு

இந்தியா முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஜிபி அளவில் இலவச சிம் கார்டு. மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வை-பை. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும். இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை.

பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

வீட்டுப் பணியாளர்களின் நலன் காக்க தேசிய சட்டம். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க சட்டம். விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

LPG சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்

பெட்ரோல் விலை ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.

பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும். ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும். ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும் என்பது உள்பட மேலும் பலவேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Fsa57 pack stihl. © 2024 eco bois confort chaleur, qualité, confiance.