Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

நம்ம ஊர் கிளைமேட்டுக்கு சன் ஸ்கிரீன் தேவைதானா?

நம்முடைய தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கு சன் ஸ்கிரீன் அப்ளை செய்யலாமா? அப்ளை செய்யத் தேவையில்லையா? என்று பலருக்கும் கேள்வி இருக்கிறது.

சிலர் சன் ஸ்கிரீன் போட்டால் நல்லது என்றும் இன்னும் சிலர் சன் ஸ்கிரீன் போட தேவையில்லை என்றும் சொல்கிறார். மொத்தத்தில் சன் ஸ்கிரீன் தேவையா? இல்லையா? அதனுடைய பயன் தான் என்ன? என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

சூரியக் கதிர்வீச்சிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும். அந்த பாதிப்பினால் முகத்தில் சரும பிரச்னைகள் ஏற்படும். அதாவது, தோல் சுருக்கம், தோல் கருத்தல், கொப்புளங்கள் உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.

இந்த சரும பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ளதான் சன் ஸ்கிரீன் பயன்படுகிறது. வெளியில் சென்றாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் சருமத்தைப் பாதுகாக்க சன் ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம்.

சிலர் வெளியில் செல்லும்போது மட்டும் சன் ஸ்கிரீன் அப்ளை செய்வார்கள். அப்படி இருப்பவர்கள், வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே சன் ஸ்கிரீனை அப்ளை செய்யவேண்டும். கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது கூட சன் ஸ்கிரீன் போடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாகவே எப்போதெல்லாம் முகத்தில் அதிக வெளிச்சம் படுகிறதோ அப்போதெல்லாம் சன் ஸ்கிரீன் அப்ளை செய்யவேண்டும்.

சன் ஸ்கிரீனை பொறுத்தமட்டில் மற்ற கிரீம்களை போல பயன்படுத்தக் கூடாது. கொஞ்சம் அதிகளவிலே பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சன் ஸ்கிரீனை வாங்கும்போது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் SPF-யின் அளவு அதிகம் கொண்ட சன் ஸ்க்ரீன்களை வாங்குவது நல்லது.

Exit mobile version