தீபாவளிக்கு வெளியான தமிழ்த் திரைப்படங்கள்!

தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசுகளும் குழந்தைகளுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி தரும் என்றால், 18 வயதைப் பூர்த்தி அடைந்தவர்களுக்கும், அதற்கு மேற்பட்டவர்களுக்கும் தீபாவளிக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் திரைப்படங்கள் மற்றொரு வகையில் மகிழ்ச்சியைத் தரும்.

பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்த திரைப்படங்கள், பல ஹிட்-களை கொடுத்த இயக்குனர்களின் படங்களின் வருகைக்காகவே அவர்களது ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

காலப்போக்கில் இந்த மாதிரியான விஷயங்கள் மாற தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஜப்பான்’ திரைப்படம். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 10) தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஜித்தன் ரமேஷ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர்களும் நடித்திருக்கின்றனர்.

அதேபோல், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஜிகிர்தண்டா டயுள் எக்ஸ்’. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் கார்த்தி இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா, அனந்திகா நடிப்பில் உருவாகியுள்ள ’Raid’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள கிடா திரைப்படம் நாளை (நவம்பர் 11) வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் காளி வெங்கட், பாண்டியம்மா, ‘பூ’ ராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

மொத்தமாகத் தீபாவளிக்கு இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகிறது. உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Tonight is a special edition of big brother. covid showed us that the truth is a matter of life or death.