பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னைக்கான திட்டங்கள் என்னென்ன?

மிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, வட சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருந்தன.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும் எனத் தெரிவித்தார். சென்னை நிதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு நிதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் ரூ.1500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த ரூ.1,675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ரூ.300 கோடியில் சென்னையில் சாலைகள் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்படி, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியன் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராக அகலப்படுத்தப்படும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் அகலப்படுத்தப்படும். இதற்காக ரூ.300 கோடி நிதி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

பூந்தமல்லி அருகே அதிநவீனத் திரைப்பட நகரம்

மேலும், கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் ரூ.100 கோடியில் புதிய வசதிகளுடன் அழகுபடுத்தப்படும். சென்னையில் நீர்நிலை மாசுபாட்டை தவிர்ப்பதற்கு ரூ.946 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும். சென்னை, பூந்தமல்லி அருகே அதிநவீனத் திரைப்பட நகரம் 150 எக்கர் பரப்பளவில் ரூ.500 கோடியில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

3,000 புதிய பேருந்துகள்

அத்துடன், சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவதோடு, அரசு போக்குவரத்துக்கழகத்துக்காக 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம். சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாட்டர் பேசின் சாலையில் ரூ.75 கோடியில் புதிய குடியிருப்புகள், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.53 கோடி, ராயபுரத்தில் உள்ள RSRM மருத்துவமனையில் ரூ.69 கோடியில் 2 புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.

அதேபோல், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.55 கோடியில் 3 புதிய தளங்கள், ரூ.11 கோடியில் தொழிற்பயிற்சி நிலையம், ரூ.30 கோடியில் ரெட்டேரி, வில்லிவாக்கம் பாடி எரிகள் சீரமைக்கப்படும். மேலும், ரூ.45 கோடியில் பள்ளிகளைப் புதுப்பித்தல் என வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.