சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட சுரங்கப் பணிகள் தீவிரம்!
சென்னை மெட்ரோ 2 ஆம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கலங்கரை விளக்கம் மற்றும் திருமயிலை இடையே சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
அதே போல் பனகல் பார்க் மற்றும் சேத்துப்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன.
நான்கு மாதங்களுக்கு முன்பு கலங்கரை விளக்கத்தில் முதல் சுரங்கப்பணிகள் தொடங்கின. அப்போது 140 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த வாரத்தில் இரண்டவது கட்டமாக, கலங்கரை விளக்கத்தில் இருந்து கச்சேரி சாலை வரையிலான சுரங்கப்பணிகள் தொடங்கி உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரமும 30 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த சுரங்கப்பணிகள், 2026 அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள், 2025ல் தொடங்கி படிப்படியாக 2028 க்குள் முழுவதுமாக முடிவடையும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவர் ஹவுசில் இருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து முதலில் தொடங்கும் எனவும், திருமயிலை மற்றும் அந்த ரயில்நிலையத்திற்குச் செல்லும் பாதைகள் கடைசியாக முடிவடைந்து திறக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.