சென்னை மாநகராட்சி பட்ஜெட் : முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை மாநகராட்சிக்கான 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில், மேயர் பிரியா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பள்ளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான ஜிம், சென்னையின் 8 நீர்நிலைகளை புனரமைப்பதற்கான திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

மொத்தம் 419 பள்ளிகளில் பயிலும் LKG வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும்.

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக 255 பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்.

LKG வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணாக்கர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக 1 செட் Shoe மற்றும் 2 செட் Socks வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை ரூ.3.00 கோடி செலவில் மேம்படுத்துதல்.

சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களில் திறமை மிக்க மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் இணையதள வாயிலாகவும் SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELENCE என்ற பயிற்சி பள்ளியில் சேர்த்து பயிற்சி வழங்குதல்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு சமுதாயக் கல்லூரிகளில் ரூ.50.00 லட்சம் செலவில் முன்னேற்றத்திற்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையில் சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல்.

சென்னை பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக ரூ.35.00 செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்துதல்.

உடற்கல்வி மேம்படுத்துவதற்காக விளையாட்டு கருவிகள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களை சிறப்பு பயிற்சி அளித்து மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறச் செய்தல்.

சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு என்பது உட்பட மேலும் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னையில் 8 நீர்நிலைகளை ரூ.10 கோடி செலவில் புனரமைக்க திட்டம்.

வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது.

200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு என்பது உட்பட மேலும் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Andrzej marczewski guitar archives am guitar. [en direct] guerre au proche orient : des combats rapprochés entre le hezbollah et israël au sud du liban. Müzikten resme, edebiyattan tasarıma kadar pek çok alanda yapay zeka destekli araçlar, sanatçılara ilham kaynağı oluyor.