Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னையில் ரூ.5 மெட்ரோ ரயில் கட்டணம் ஏன்?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நிறுவன தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, க்யூஆர் பயணச்சீட்டுகளில் (Static QR, Paytm; Whatsapp and PhonePe) ஒற்றைப் பயண இ-க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்குகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் Foundation தினத்தை நினைவுகூரும் வகையிலும், பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி, மெட்ரோ ரயிலில் வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பிரத்யேக கட்டணம் அன்று ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR, Paytm, Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.

தங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கான தங்களது பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணத்தை வழங்குவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version