சந்தன பேழையில் விஜயகாந்த் உடல்… இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்!

சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், அவரது உடல் சந்தன பேழையில் வைத்துக் கொண்டு வரப்படுகிறது. வழி நெடுக ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் அவரது உடலை சுமந்து வரும் வாகனத்தின் பின்னால், ‘கேப்டன்… கேப்டன்’ என கண்ணீர்விட்டு கதறியபடியே பின் தொடர்ந்து வருவது, காண்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது.

நேற்று காலமான விஜயகாந்தின் உடல், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்கள், அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, தீவுத்திடலுக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.

தீவுத்திடலில் திரண்ட கூட்டம்

இதனால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் தீவுத்திடலை நோக்கி குவியத் தொடங்கினர். மேலும், கோயம்பேட்டில் நேற்று காணப்பட்ட நெரிசலால் வரமுடியாமல் போனவர்களும், வெளியூர்களில் ஷூட்டிங்கில் சிக்கிக் கொண்ட ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று காலை முதல் தீவுத்திடலுக்கு வந்து விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது 2 மகன்களுக்கும் ஆறுதல் கூறினர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இன்னொரு பக்கம் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களும் கண்ணீர்விட்டு கதறியபடியே வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல் இன்று மதியம் தீவுத் திடலிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிற்பகல் 2.15 மணிக்கு தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

சந்தன பேழையில் உடல்

விஜயகாந்தின் உடல், 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்துக் கொண்டு வரப்படுகிறது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலத்தில், ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் அவரது உடலை சுமந்து வரும் வாகனத்தின் பின்னால் ‘கேப்டன்… கேப்டன்’ என கண்ணீர்விட்டு கதறியபடியே பின் தொடர்ந்து வருவது காண்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது. மேலும் திரையுலகைச் சேர்ந்தவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாகனங்களில் பின் தொடர்ந்தனர்.

இறுதிச் சடங்கில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்துக்குள் செல்ல, 200 நபர்களுக்கு மட்டும் 4 நிறங்களில் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் கோயம்பேடு தேமுதிக அலுவலகம் அருகே திரண்டனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் திரண்டிருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில், கூட்ட நெரிசலால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், போலீசாரின் அறிவுறுத்தல்களையும் மீறி, தேமுதிக அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற கூட்டத்தினரை, காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

72 துப்பாகி குண்டுகள் முழங்க அரசு மரியாதை

இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் கூட்டம் அதிகரிப்பதால், வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன. தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தை நோக்கி, ரசிகர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குக்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவரது உடல் தேமுதிக அலுவலக வளாகத்தை வந்தடைந்ததும், 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct, guerre au proche orient : quatre soldats israéliens tués dans une frappe de drones du hezbollah – le monde. Husqvarna 135 mark ii. Tondeuse robot bosch archives eco bois confort chaleur, qualité, confiance.