‘கிரில் சிக்கன்’ சாப்பிடக்கூடாதா … மருத்துவர்கள் சொல்லும் எச்சரிக்கை என்ன?

கிரில் சிக்கன்… அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் கிரில் சிக்கனுக்கும் தனி இடம் உண்டு. இந்த மாதிரியான உணவுகளை வீடுகளில் சமைப்பது அவ்வளவாக சாத்தியமில்லை என்பதால், அதனை சாப்பிட வேண்டும் என விருப்பப்பட்டால் ஓட்டலை தான் நாட வேண்டும்.

ஆனால் அப்படி கிரில் சிக்கனை ஓட்டலில் சாப்பிட சென்றவர்களில் பலர் வாந்தி, வயிற்றுப் போக்கு எனப் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடுவதாக சமீப நாட்களாக புகார்கள் வரிசை கட்டுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் கூட சென்னை ஓட்டல் ஒன்றில் கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு குடும்பத்தினர் வெகுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இது குறித்து கேட்டதற்கு சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் அலட்சியத்துடன் பதிலளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குமுறலுடன் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு என்ன காரணம், எல்லோரும் கிரில் சிக்கன் சாப்பிடலாமா, யாரெல்லாம் சாப்பிடக்கூடாது, எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது, இதில் என்னென்ன கவனம் தேவை… என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அரசு பொது நலன் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா….

கிரில் சிக்கன் சாப்பிட்ட பிறகு பொதுவாக ஏதேனும் உடல் நல பிரச்னைகள் ஏற்படுமா?

கிரில் சிக்கன் சாப்பிட்டாலே உடல் நலக் குறைவு ஏற்படும் என்பது இல்லை. அது பழைய சிக்கனாக இருக்கும் பட்சத்தினாலும், அதில் சேர்க்கக் கூடிய மசாலா மற்றும் சுவையூட்டிகளினாலும், சிக்கனை சரியான பதத்தில் சமைக்காததாலும் கிருமித் தொற்று ஏற்பட்டு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்.

கிரில் சிக்கன் சாப்பிட்ட பிறகு சிலருக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை என்றால், வெளிப்படும் பொதுவான அறிகுறிகள் என்ன?

கிரில் சிக்கன் சாப்பிட்டாலே ஒவ்வாமை ஏற்படும் என்று சொல்ல முடியாது. அந்த கிரில் சிக்கன் கெட்டுப் போனதாக இருக்கும்போது அதைச் சாப்பிட்ட ஒரு சில மணி நேரங்களில் வயிறு வலிக்க தொடங்கும். அதன்பிறகு வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதுதான் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன.

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கிரில் சிக்கனை எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் சாப்பிடலாமா? அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் நல பிரச்னை ஏற்படுமா?

நல்ல கோழிகளினால் செஞ்ச உணவை சாப்பிட்டால் பிரச்னைகள் வராது. தரமற்ற ஹோட்டலில், முந்தைய தினம் விற்காத பழைய சிக்கனை, சரியான பதத்தில் வைக்காமல் சாப்பிட்டால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தினந்தோறும் சிக்கனை சாப்பிட்டாலும் அது ஆரோக்கியமான அதாவது புதிய (Fresh) சிக்கனாக இருந்தால் ஒன்றும் ஆகாது.

யாரெல்லாம் அல்லது எந்த வயதினர் எல்லாம் கிரில் சிக்கனை சாப்பிடக்கூடாது..?

கிரில் சிக்கனை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. உணவுகளின் மீது தவறு இல்லை. கெட்ட உணவுகளை விற்பவர்களால்தான் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கிரில் சிக்கன் நல்லதே கிடையாது. அவர்கள் கிரில் சிக்கனை சாப்பிட்டால் குழந்தை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் கர்ப்பம் தரிக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு கிரில் சிக்கன் உகந்தது இல்லை. இது hormone imbalance ஏற்படுத்துவதோடு, கருத்தரித்தலை தடுக்கும். அதனால் கிரில் சிக்கன் என்பது அடுத்த தலைமுறையினருக்கு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடிய விஷயம்.

ஏதாவது குறிப்பிட்ட மருந்து சாப்பிடுபவர்கள் கிரில் சிக்கன் சாப்பிடக்கூடாது என உள்ளதா?

அப்படி ஏதும் இல்லை.

அடுத்ததாக சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியின் மருத்துவர் தீபாவிடம் வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கான பதில்கள்…

கிரில் சிக்கனில் ஊட்டச் சத்து உள்ளதா?

பொதுவாக சிக்கனில் 122-125 கலோரிகள் இருக்கின்றன. 25-28 கிராம் வரையிலான புரத சத்துகள் இருக்கின்றன. மேலும் அதில் கொழுப்பு, வைட்டமின், நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. கார்போ ஹைட்ரேட் இல்லை.

ஆனால் அந்த சிக்கனை கிரில் சிக்கனாக எடுத்துக்கொண்டால் அது நமக்கு நிறைய உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. கிரிலில் சேர்க்கக் கூடிய மசாலாக்கள், மயோனைஸ் போன்றவை உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். சிக்கனை கிரில் செய்யும்போது, Hetero cyclic amine, Polycyclic aromatic hydrocarbons (PAHs) போன்ற கூறுகள் வெளியேறும். இதற்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இருக்கின்றன. அதனால்தான் சிக்கனை கிரில் முறையில் சாப்பிட வேண்டாம் எனச் சொல்கிறோம். இது சிக்கனுக்கு மட்டும் பொருந்தும் என்பது இல்லை. அனைத்து வகையான இறைச்சிகளையும் கிரில் செய்து சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மருத்துவர் தீபா

சிக்கனை வேக வைத்து சப்பிடுவதற்கும், கிரில் செய்து சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிக்கனை கிரில் செய்கிறோம் என்றால் குறைந்தது 103 டிகிரி பாரன்ஹீட் அல்லது 98 டிகிரி செல்சியஸ் தேவைப்படும். அப்படி செய்தால் மட்டுமே சிக்கன் சரியான முறையில் வேகும். சரியான முறையில் வேக வைக்காத சிக்கனை சாப்பிடும்போது பாக்டீரியாக்கள் அப்படியே இருக்கும். அதனால் நமக்கு பிரச்னைகள் வரும்.

கிரில் முறையில் தயாரிக்கப்படும் சிக்கனுக்கும் சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிடும் சிக்கனுக்கும் ஊட்டச்சத்தில் வேறுபாடு உள்ளதா?

கண்டிப்பாக இருக்கும். சிக்கனை கடையிலிருந்து வாங்கிவந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் உடனே அதை சமைக்கவேண்டும். அப்படி சமைக்காமல் எந்த மாதிரி பதப்படுத்தி வைத்தாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். கிரில் சிக்கனை பாதி மட்டும் வேக வைத்துவிட்டு, அதை கிரில் மெஷினில் வைத்துவிடுவார்கள். ஆர்டர் வரும்போது மட்டுமே அந்த சிக்கனை மீண்டும் சூடு செய்து தருவார்கள். அதுமட்டும் இல்லாமல் அதைத் திரும்பத் திரும்ப சூடு செய்துகொண்டே இருப்பார்கள். அதனால் வெளியேறும் வேதிப் பொருட்கள் நம் உடம்பில் உள்ள டிஎன்ஏ செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதை கேன்சர் செல்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

கிரில் சிக்கனை விட ஆரோக்கியமான மாற்று சமையல் முறைகள் உள்ளதா?

சிக்கனை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை நாம் வீட்டிலேயே சமைத்து சாப்பிடவேண்டும், நம்முடைய பாரம்பரிய சமையலில் இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவை இறைச்சி சமைக்கும்போது கண்டிப்பாகப் பயன்படுத்துவோம். இறைச்சியிலிருந்து வரும் கெட்ட கொழுப்புகளிருந்து எளிதாகச் செரிமானம் ஆவதற்கும் நம்முடைய உடலை காக்கவும்தான் நம்முடைய முன்னோர்கள் இதை எல்லாம் சேர்த்துச் சமைப்பார்கள். ஆனால் கிரில் சிக்கனில் சேர்க்கப்படும் மசாலாக்கள் முற்றிலும் மாறுபட்டது.

கிரில் சிக்கனில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளினால் ஏதும் பாதிப்பு உண்டா?

கண்டிப்பாக ஏற்படும். அதிலும் இந்த மயோனைஸ் முழுக்க முழுக்க கொழுப்புகளினால் செய்யப்படுவது. கிரில் சிக்கனில் சுவைக்காக நிறைய கெமிக்கல்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் அதில் சோடியம் அதிகமாக இருக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு, உடல் பருமன் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். செரிமான பிரச்னையும் ஏற்படும்.

கிரில் சிக்கன் சாப்பிடும்போது ஏதாவது குறிப்பிட்ட உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது போன்று ஏதாவது உள்ளதா?

கேஸ் பொருந்திய பானகத்தோடு கிரில் சிக்கனை சாப்பிடக் கூடாது. பெரிய பெரிய உணவங்களில் சிக்கனும் கேஸ் பொருந்திய பானகமும்தான் கொடுக்கிறார்கள். இந்த மாதிரி சாப்பிடும்போது அது இன்னும் எதிர்வினையாற்றும். அது நம்முடைய வயிற்றில் இருக்க கூடிய அமிலத்தின் அளவையே மாற்றும். இதுகுறித்து 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கிரில் சிக்கன் சாப்பிடும் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்ததாக அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் கிரில் சிக்கனை கண்டிப்பாக நாம் சாப்பிடாமல் தவிர்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Br450c ef stihl archives startekbv de bron van groene innovatie. Donec ultrices ligula at nibh laoreet ultricies vel sed odio.