கலைஞர் நினைவிடம்: “இது தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால்! ” – வைரமுத்து சிலிர்ப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து, அது குறித்து சிலிர்ப்புடன் தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்
கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு
இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்
“இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்”
கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்
உலகத் தரம்
நன்றி தளபதி” எனத் தெரிவித்துள்ளார்.