கணித்தமிழ்24 பன்னாட்டு மாநாட்டில் நிரலாக்கப் போட்டி!

1968 ஜனவரி முதல் கீழமை நீதி மன்றங்களின் சாட்சிகள் தமிழில் விசாரிக்கப்பட்டனர். பின்னர் நீதி விசாரணை தமிழில் நடைபெற்று தீர்ப்புகளும் தமிழில் வழங்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டு முதல் நீதித்துறை, சட்டத்துறை ஆகியவற்றில் தமிழ் மொழி செயல்படுத்தப்பட்டது.

முதன்முதலில் சட்ட அகராதி 1968 ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்டது. இப்படி எத்தனையோ ஆக்கங்களை செய்து தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் சேர்த்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாடு, வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் நடக்கிறது.

உலகம் தழுவி வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணித் தமிழை மேம்படுத்தும் பணிகளைச் செய்துவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் தலைமையில் நடந்த ‘தமிழிணையம் 99’ மாநாட்டுக்குப் பிறகு இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி மிக அதிகம். செயற்கை நுண்ணறிவு சமீப காலமாக முழுவீச்சில் களம் கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடும் வகையில், இந்தப் பன்னாட்டு மாநாடு அமையும்.

ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள், காட்சி அரங்குகள் ஆகியவை கணினித்தமிழ்24 மாநாட்டின் முக்கியக் கூறுகளாகும்.

மாநாட்டின் ஒரு பகுதியாக StartupTN நிறுவனத்துடன் இணைந்து நிரலாக்கப் போட்டியை (Hackathon) தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவிருப்பதாக தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. சே.ரா. காந்தி தெரிவித்துள்ளார்.

நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர மின்னிலக்க தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்னிலக்க யுகத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டையும் புரிதலையும் மேம்படுத்தும் புதுமையான கருவிகள் உருவாக்குவதை ஊக்குவிப்பதும், மொழியியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து தமிழ் மொழியில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்.

அதோடு, கல்வி, உள்ளடக்க உருவாக்கம், தகவல் தொடர்பு போன்ற தளங்களில் தமிழ் மொழியைக் கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியைச் செழுமையுடன் பயன்படுத்தும் சூழலும் இந்த நிரலாக்கப் போட்டியின் மூலம் நிச்சயம் உருவாகும்.

தமிழ் எழுத்துணரி (Tamil OCR), தமிழ்ப் பேச்சைப் புரிந்துகொள்ளுதல் (Tamil Speech Recognition), தமிழ் உள்ளடக்க உருவாக்கம் (Tamil Content Creation), தமிழ் உரையாடி (Tamil Chatbot), தமிழில் இயற்கை மொழி ஆய்வு (Tamil Language NLP) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நிரலாக்கப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், ஆர்வலர்களும், மொழித் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் கலந்துகொள்ளலாம்.

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு, கணித்தமிழ் 24 மாநாட்டில் செயல்விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். மேலும், நிரலாக்கப் போட்டியிலிருந்து உருவாகியிருக்கும் கருவிகள், மென்பொருள்கள், தளங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவை ஆய்வாளர்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக www.tamilvu.org இணையதளத்தில் பதிவேற்றப்படும். போட்டியாக மட்டுமல்லாமல், கற்றல் செயல்பாடாகவும் புதிய வாசல்களைத் திறந்துவைக்கும் வகையிலும் நிரலாக்கப் போட்டி இருக்கும்.

அர்ப்பணிப்புமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், தொலைநோக்குச் சிந்தனையாளர்கள், அனுபவமிக்க மொழியியல் அறிஞர்கள், கல்விச் சமூகத்தினர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியாக இந்த மாநாடு நடக்கிறது.

தமிழ் மொழியின் பரவலான இருப்பையும், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் தமிழ் மொழியின் நிலையையும் வெளிக்கொண்டுவர இந்த மாநாடு பேருதவியாக இருக்கும். அதோடு இந்த மாநாடு இளம் தலைமுறையினருக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த மாநாடு மற்றும் போட்டி குறித்த விரிவான விவரங்களுக்கு: https://www.kanitamil.in/#/hackathon என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tujuh stasiun televisi izin siarnya dicabut, apa penyebabnya ! chanel nusantara. Dancing with the stars queen night recap for 11/1/2021. Platform is evident in this move, empowering developers to select the ai models that best suit their specific needs.