“எனக்குத் துணையாகவும் தூணாகவும் இருக்கிறார் உதயநிதி!” – நெகிழ்ந்த ஸ்டாலின்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி 2–வது மாநில எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனக்குத் துணையாகவும் மட்டுமல்ல; தூணாகவும் உதயநிதி இருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று சென்னை இராபின்சன் பூங்காவில் திரண்டிருந்த அதே கொள்கை உறுதியையும், இலட்சிய வேட்கையையும் இன்றைக்கு இலட்சக் கணக்கான இளைஞர்களான உங்களிடம் பார்க்கிறபோது, இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! ”அஞ்சா நெஞ்சர்களை அருந் தம்பிகளாகப் பெறும் பேறு பெற்றேனே!” என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா பெருமைப்பட்டதுபோல நான் பெருமைப்படுகிறேன்.
“இந்த உணர்வை – உற்சாகத்தை – எழுச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கும், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்களைப் பாராட்டுகிறேன் – வாழ்த்துகிறேன்! “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்” என்று அய்யன் வள்ளுவர் சொன்னது போல, அவரின் செயல்கள் – கழகப் பணிகள், மக்கள் தொண்டு அமைந்திருக்கிறது! கழகத்திற்கான பணி, மக்களுக்கான பணி இரண்டிலும் எனக்குத் துணையாக மட்டுமல்ல; தூணாக தம்பி உதயநிதி இருக்கிறார்! அந்த உழைப்பைப் பார்த்துதான் நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழக நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைகிறோம்!
இந்த உணர்வை – உற்சாகத்தை – எழுச்சியை – ஏற்படுத்தி தந்திருக்கும், இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு தம்பி உதயநிதி அவர்களைப் பாராட்டுகிறேன் – வாழ்த்துகிறேன்! “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதுபோல, அவரின் செயல்கள் – கழகப் பணிகள் – மக்கள் தொண்டு அமைந்திருக்கிறது! கழகத்திற்கான பணி, மக்களுக்கான பணி இரண்டிலும் எனக்கு துணையாக மட்டுமல்ல, தூணாக தம்பி உதயநிதி இருக்கிறார்! அந்த உழைப்பை பார்த்துதான் நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழக நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைகிறோம்!
எனக்கு முப்பது வயது இருக்கும்போது தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கினார்கள்! அவர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியதுபோல என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிக்கொடி கட்டும் கொள்கைப் படையாக இளைஞரணி செயல்பட்டு வருவதை, இந்த சேலம் மாநாடு, நாட்டுக்கே சொல்லிவிட்டது!
“எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது” என்ற நம்பிக்கை ஊட்டும் மாநாடாக இந்த சேலம் இளைஞரணி மாநாடு அமைந்துவிட்டது! இவ்வாறு என்னை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வைத்த இளைஞரணிச் செயலாளர் – மாநில துணைச் செயலாளர்கள் – மாவட்ட அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் என்று ஒட்டுமொத்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் – நன்றியும்!” என நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.