கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் படிக்க ஆர்வமா? உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு!

லகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன், தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைத் தொடங்க உள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு, நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சு வடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான (2024-25) மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. இந்த பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தினை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் www.ulakaththamizh.in வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பட்டயப் படிப்புக்கான சேர்க்கக் கட்டணம் ரூ.3200 (அடையாள அட்டை உள்பட) ஆகும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் (Director,International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்பப்பெறுதல் வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பம், வாட்ஸ்ட் ஸ் ஆப் எண்குறிப்பிட்டு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 5.4.2024 ஆகும். எழுத்துத் தேர்வு 12.4.2024 (வெள்ளிக்கிழமை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். வகுப்பு தொடங்கப்பெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

வகுப்பு வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

ரூ.3000 உதவித் தொகை

இப்பட்டயப் படிப்பினை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு, மாதம்தோறும் ரூ.3000 வீதம் உதவித் தொகை வழங்கி வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. 자동차 생활 이야기.