உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பயிற்சி!
நீங்கள் சிறுதொழில் முனைவோரா..? உங்களின் உற்பத்திப் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது என்று தெரியவில்லையா..?
அப்ப இதைப் படிங்க..
நீங்கள் சிறு முதலாளியோ… ஸ்டார்ட் அப் உரிமையாளரோ, ‘உங்கள் பொருட்களை எப்படி விற்பனை செய்கிறீர்கள்?’ என்பதில் அடங்கியிருக்கிறது உங்கள் வெற்றி. இப்போது ஆன்லைனில் சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதை நீங்கள் அறிந்து கொள்ள, மூன்று நாள் பயிற்சி ஒன்றை தமிழக அரசின் ‘தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்’ சென்னையில் நடத்துகிறது.
28.11.2023 முதல் 30.11.2023 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் – இணையதளத்தை உருவாக்குதல் – சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்தல், பிராண்டிங் லேபிளிங், டொமைன் பெயர் உருவாக்குதல் & ஹோஸ்டிங் – இணையதள வடிவமைப்பு… என எல்லாவற்றிலும் பயிற்சி அளிக்கிறார்கள்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற www.editn.in என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை–600032 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.