விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் ஆதி திராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். அது அரசு ஆதி திராவிடர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கான விடுதி. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.
அந்த விடுதியின் சுவர்களில் அம்பேத்கர், கார்ல்மார்க்ஸ், பெரியார், அண்ணா என்று தலைவர்களின் படம் வரையப்பட்டிருந்தது.
அந்தப் படங்களைப் பார்த்து அசந்து போன உதயநிதி ஸ்டாலின், அதை வரைந்தவர் யார் எனக் கேட்டிருக்கிறார். பரமேஷ் என்ற மாணவர்தான் அதை வரைந்தவர் என்று சொன்னார்கள். இளங்கலை வரலாறு இறுதியாண்டு படிக்கும் மாணவர் அவர். அவரை அழைத்து உதயநிதி வாழ்த்தினார்.
முற்போக்கு சமூகநீதி அரசியலின் மீதுள்ள ஆர்வத்தால் அந்த ஓவியங்களைத் தீட்டியதாக அந்த மாணவர் சொல்லி உதயநிதியை அசர வைத்திருக்கிறார்.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.