Amazing Tamilnadu – Tamil News Updates

‘இளம் வயது மாரடைப்பை தவிர்க்கலாம்..!’ – கமல் சொல்லும் அட்வைஸ்!

மீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் மரணமடையும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் கொரோனா பாதிப்புக்கு பின்னர்தான் இத்தகைய மரணங்கள் அதிகமாக நடப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

இது உண்மையா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், இளம் வயதினர் இளம் வயதினர் மாரடைப்பால் மரணமடையும் சம்பவங்கள் நாடு முழுவதுமே நிகழ்வதை செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. கடந்த வாரம் கூட குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த தாண்டியா நடன நிகழ்ச்சிகளின்போது, ஆடிக்கொண்டிருக்கும்போதே 10 பேர் வரை திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்தது. இறந்தவர்களில் 13 வயது சிறுவன், 17 வயது சிறுவன், 24 வயது இளைஞர் என இளம் வயது மரணங்கள் அதிகமாக ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான அறிவுரையை நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், சமீப காலமாக இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைக் குறிப்பிட்டு, 30 – 40 வயதுகளில் இந்த பிரச்னை வருவது வியப்பாக இருக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து தனது மருத்துவ நண்பர்களிடம் பேசியபோது, அவர்கள் இதற்கு மூன்று காரணங்களைப் பட்டியலிட்டதாக தெரிவித்தார்.

தாண்டியா நடனத்தின்போது மாரடைப்பு ஏற்பட்ட இளைஞர்

“உறக்கமின்மை, உணவுப் பழக்கம், செயலாற்றாமல் இருப்பது என இந்த 3 காரணங்களாலேயே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுகிறது” என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்த கமல்ஹாசன், “உறக்கத்திற்கும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. உணவே மருந்தாக இருக்க வேண்டும். மருந்து உணவாக இருக்கக் கூடாது. உடல் செயல்பாட்டுகளை நாம் செய்வதில்லை. அசையாமல் உருளைக்கிழங்குகளைப்போல் இருக்கிறோம்.

கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் விளையாடுவதிலும் இருக்க வேண்டும். ‘ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்பதை இளைஞர்கள் கவனக்குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என அறிவுறுத்தி உள்ளார்.

Exit mobile version