ஆஸ்கர் விருது 2024: 7 விருதுகளை வென்ற ‘ஓப்பன் ஹெய்மர்’ … விருது பட்டியல் முழு விவரம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட்டில் இன்று நடைபெற்றது. கிறிஸ்டோபர் நோலனின் வாழ்க்கை வரலாற்று த்ரில்லர் படமான ‘ஒப்பன்ஹெய்மர்’ சிறந்த படம் உள்ளிட்ட 7 விருதுகளை வென்றது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘ஒப்பன்ஹெய்மர்’. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில், ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார்.

‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது.

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து விருதுகளை வென்று ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் செலுத்தியது. இதனையடுத்து ஆஸ்கர் விருதுகளில் அதிக விருதுகளை ‘ஒப்பன்ஹெய்மர்’ வெல்லும் என்று கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்ற 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘ஒப்பன்ஹெய்மர்’ சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

விருது பட்டியல் முழு விவரம்:

சிறந்த படம் – ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer)

சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (Oppenheimer)

சிறந்த நடிகர் – கில்லியன் மர்பி (Oppenheimer)

சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (Poor Things)

சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (Oppenheimer)

சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (The Holdovers)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – The Boy and the Heron

சிறந்த அனிமேஷன் குறும்படம்- War Is Over

சிறந்த தழுவல் திரைக்கதை – American Fiction

சிறந்த காட்சியமைப்பு – Godzilla Minus One

கில்லியன் மர்பி, எம்மா ஸ்டோன், டாவின் ஜாய் ராண்டால்ஃப், ராபர்ட் டவுனி ஜூனியர்

சிறந்த மேக் அப் – Poor Things

சிறந்த உற்பத்தி வடிவமைப்பு – Poor Things

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஹால்லி வட்டிங்டன் (Poor Things)

சிறந்த அசல் திரைக்கதை: Anatomy Of A Fall

சிறந்த ஒளிப்பதிவு: (Oppenheimer)

சிறந்த ஆவண திரைப்படம் – 20 Days in Mariupol

சிறந்த ஆவண குறும்படம் – The Last Repair Shop

சிறந்த எடிட்டிங்: (Oppenheimer)

சிறந்த சர்வதேச திரைப்படம்: THE ZONE OF INTEREST (UK)

சிறந்த ஒரிஜினல் இசை: Indiana Jones and the Dial of Destiny

சிறந்த ஒரிஜினல் பாடல்: What Was I Made For? (Barbie)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: The Wonderful Story of Henry Sugar

சிறந்த ஒலி: The Zone of Interest

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Godzilla Minus One

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。. Rent a car/bike/boat roam partner.