ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி… தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

ன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால், சில காலம் ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து இளைஞர்கள் தப்பி இருந்தனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தொடரும் நிலை ஏற்பட்டது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தின் மூலமே இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவுகட்ட முடியும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதே சமயம், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் மக்கள் ஈர்க்கப்படுவதை தடுக்கும் விதமாக, தன்னால் இயன்ற அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம், வாய்ப்பு விளையாட்டு ஆகியவை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி, இணைய வழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையில் இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத் தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்த ஒரு ஊடகத்திலும் விளம்பரம் அறிவிப்போ செய்யக் கூடாது.

ஆலோசனைகள், குறைகளைத் தெரிவிக்க…

அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர் அல்லது நிறுவனத்துக்கு, ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் www.tnonlinegamingautho rity.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seine saint denis : une alerte enlèvement déclenchée pour retrouver un nourrisson de 17 jours. Baby bооmеrѕ, tаkе it from a 91 уеаr оld : a lоng lіfе wіth рооrеr hеаlth іѕ bаd nеwѕ, аnd unnесеѕѕаrу. Hest blå tunge.