அமேசான் மெகா Sales ஐ அப்புறம் பார்ப்போம்…

தீபாவளி மெகா சேல்ஸ் என்ற பெயரில் அமேசானும் பிலிப்கார்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து மெகா விற்பனையைத் துவக்குகின்றன.
ஆன்லைன் மார்க்கெட்டில் ஒரு ரவுண்ட் போய் வந்து விடலாம் என்று நாம் நினைப்போம். அது ஒரு புறம் இருக்கட்டும். சென்னை நுங்கம்பாக்கத்தில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடங்கி இருக்கிறது. அதைப் போய்ப் பார்த்து விட்டு வரலாம்.
நவராத்திரிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடக்கும் அந்தக் கண்காட்சியில் பட்டு, பருத்தி ஆடைகள், மட்பாண்டப் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை, வாழை நாரில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், தோல் பொருட்கள், கொலு பொம்மைகள், வாசனைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், சுடுமணல் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள் என்று விதவிதமான பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பொருட்கள் மகளிர் சுயஉதவிக்குழுப் பெண்களால் தயாரிக்கப்பட்டவை.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் நடக்கும் கண்காட்சி 20ம் தேதி வரையில் நடக்கிறது.. என்ஜாய்…
நாம் வாங்கும் பொருட்கள் நமக்கு பயன்படும் என்பது மட்டுமல்ல. சொந்தக்காலில் நின்று முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு உதவியாகவும் இருக்கும்.