விஜயகாந்த்: தேமுதிக அலுவலகத்திலேயே உடல் நல்லடக்கம்… சென்னையில் குவியும் ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதுமிருந்து அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் சென்னை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவால் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளானார்கள். இந்த நிலையில், விஜயகாந்த் உடல், மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சடங்குகள் முடிக்கப்பட்டது.

அரசு மரியாதை

இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். திரையுலகினரும் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் வேதனையும் தெரிவித்திருந்தனர். மேலும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகத்திலேயே நல்லடக்கம்

இந்த நிலையில், விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் விடுத்துள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் காலமானார். அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குவியும் ரசிகர்கள்

இந்த நிலையில், விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் விஜயகாந்த் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது உருவ படத்திற்கு அவரது கட்சியினரும் ரசிகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை நடக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை நோக்கி புறப்படத் தொடங்கி உள்ளனர். இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, வரிசையாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Lizzo extends first look deal with prime video tv grapevine. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.