‘தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி’… எச்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமர் மோடி ஆட்சியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை எம்.பி-க்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள 543 தொகுதிகளுக்குப் பதிலாக 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பதன் மூலம் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அதே சமயம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 தொகுதிகளின் எண்ணிக்கையை 31 தொகுதிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் போன்றவற்றில் தென்மாநிலங்களை மத்திய மோடி அரசு வஞ்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் தமிழகத்தின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கான மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையும்போது, தமிழ்நாட்டிற்கான குரல் ஓங்கி ஒலிக்காது. இதனால், மாநிலம் பல்வேறு வகையில் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

அந்த வகையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

”இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதள பக்கத்தில், “பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மக்கள்தொகையைக் குறைத்ததற்கான தண்டனையா?

மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் – கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

பாசிசத்தை வீழ்த்த – ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ms/myrecoverykey for bitlocker recovery to unlock your windows 11 pc. Tonight is a special edition of big brother. 42 meter motor yacht.