விளாத்திக்குளத்தில் கனிமொழி தேர்தல் பிரசாரம்: புகைப்பட தொகுப்பு!

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக எம்.பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் கனிமொழியும் இருப்பதால், இதர தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தான் போட்டியிடும் தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவர் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குறுக்குச்சாலை, வேடநத்தம் மற்றும் குளத்தூர் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், முன்னேறும் தூத்துக்குடியின் தொடர் வளர்ச்சிக்கு INDIA கூட்டணியின் வெற்றி அவசியம் என மக்களிடம் எடுத்துக் கூறினார். அதன் புகைப்பட தொகுப்பு கீழே…

அரியநாயகிபுரம்

மாநிலங்களை ‘வரி’ கொள்ளையடிக்கும் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த வேண்டும்; நம் உரிமைகளை மீட்க INDIA கூட்டணி வெல்ல வேண்டும் என்றெடுத்துரைத்து, வைப்பார், சூரங்குடி மற்றும் அரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளில் கூடிய பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னதிற்கு வாக்கு சேகரித்தார். அதன் புகைப்பட தொகுப்பு கீழே…

நாகலாபுரம்

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் தூத்துக்குடிக்கு பணியாற்றிடும் வாய்ப்பை அளித்திடுமாறு விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம் பகுதிகளில் திரண்ட மக்களிடம் கேட்டுகொண்டார். அதன் புகைப்பட தொகுப்பு கீழே…

புதூர்

சின்னவநாயக்கன்பட்டி, புதூர், சிவலார்பட்டி பகுதி மக்களைச் சந்தித்து, வரும் தேர்தலில் தனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டார். அதன் புகைப்பட தொகுப்பு கீழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. The real housewives of beverly hills 14 reunion preview. 인기 있는 프리랜서 분야.