நீங்களும் தொழிலதிபராகலாம்… தமிழக அரசின் 5 நாள் பயிற்சி!

தொழில்முனைவோர் ஆக விரும்புவர்களுக்கு தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி நாட்கள் எப்போது?

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” எனும் தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி, வரும் 08. 07.2024 முதல் 12.07.2024 தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்?

இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் & அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் & பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் – ERP Tally,ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றிய விளக்கங்கள் ஆகியவை குறித்து விளக்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதி என்ன?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ( ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆவது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.

தங்கும் விடுதி

இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு, குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர், இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய…

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

மேலும் விவரங்களுக்கு, அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை), காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி/ கைபேசி எண்கள் விவரம் வருமாறு:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032

தொலைபேசி/ கைபேசி எண்கள்

7010143022/8668102600

முன்பதிவு அவசியம்

பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

noleggio yacht con equipaggio. hest blå tunge. Alex rodriguez, jennifer lopez confirm split.