Amazing Tamilnadu – Tamil News Updates

தாயும் சேயும் நலமாயிருக்க கண்காணிப்பு இணையதளம்!

ர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தை அவ்வப்போது கண்காணித்துப் பாதுகாக்க இணையதளம் ஒன்றை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.

கர்ப்பம் மற்றும் குழந்தை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation- PICME 3.0) எனும் இணையதளம் ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

கர்ப்பகாலத்தில் கரு கலைந்து விடுதல், பிரசவ நேரத்தில் தாய் அல்லது குழந்தைகள் உயிரிழப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கு கர்ப்பகாலத்தில் தொடர் கண்காணிப்பு அவசியம். அவ்வாறு கண்காணிப்பதற்கு இந்த இணையதளம் உதவும். இந்த இணையதளம், கர்ப்பகாலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் தாய் மற்றும் சேய்க்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அறிய உதவும். அதன் மூலம் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து, தாயும் சேயும் நலமுடன் இருப்பதை உறுதி செய்வார்கள்.

அமைச்சர் மா. சுப்ரமணியன்

இது குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில், “சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 700ல் இருந்து 800 பிரசவங்கள் நடக்கின்றன. PICME 3.0 இணையதளமானது, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல்நலம் குறித்து அவ்வப்போது கண்காணித்துப் பதிவு செய்யும். இது அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உதவும்” என்றார்.

Exit mobile version