உதயநிதி ஸ்டாலின்: மக்களைக் கவர்ந்த பிரசார யுக்தி!

மிழ்நாட்டில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் 24 நாட்கள், 8,465 கி.மீ. பயணித்து, 1. 24 கோடி பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து, புதிய யுக்திகளைக் கையாண்டு பிரசாரம் மேற்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

“உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் போது கூடியிருந்த மக்கள், Pindrop Silence என்பார்களே, அந்த அமைதியுடன் நின்றபடியே கேட்டு ரசித்தனர். அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் அமைதியாகக் கேட்டு கைதட்டி மகிழ்ந்தது. இறுதி வரை கலையாமல் அவருடைய பேச்சைக் கேட்டது. மற்றொரு முக்கியச் சிறப்பாக உதயநிதியின் பேச்சு எளிமையான தமிழில் அமைந்திருந்தது. அடுக்கு மொழிகள் இல்லை. ஆனால் அர்த்தம் செறிந்ததாக இருந்தது. மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆழமான சிந்தனையைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் மக்கள் ரசித்தனர். கட்டுக்கோப்புடன் கேட்டு மகிழ்ந்தனர்” என்கிறது திமுக மேலிடம்.

கலைஞரை நினைவுபடுத்திய உதயநிதி

இது தொடர்பாக பேசும் அறிவாலய மேலிட தலைவர்கள், “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் – அந்த ஊரில் கழகம் வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார். அதைக் கேட்கும் தொண்டர்கள் நம் பெயரை நினைவில் வைத்து நம்மைப்பற்றிக் கூட்டத்தில் பேசுகிறாரே தலைவர் என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.

கலைஞர் மீது மாறாத பாசத்துடன் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னிலும் வேகமாகத் தொடர்வார்கள். திமுக ஒரு இரும்புக்கோட்டையாகத் திகழ்வதற்கு கலைஞரின் இந்தப் பேச்சுத்தன்மை ஒரு முக்கியக் காரணம். தற்போது உதயநிதியின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்தப் பிரசாரத்தில் காண முடிந்தது” எனக் கூறி சிலாகிக்கிறார்கள்.

ஒற்றைச் செங்கல் Vs மிஸ்டர் 29 பைசா

மேலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கலைக் காண்பித்து உதயநிதி மேற்கொண்ட பிரசாரம், பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி திமுக-வுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்ததாக கூறும் திமுக-வினர், “அதேபோன்று இந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றிய அரசு GST வரி வசூலாக 1 ரூபாக்கு 29 பைசாதான் திருப்பித் தருகிறது என்றும், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை எடுத்துக்கூறி, ‘இனிமேல் திரு.மோடி அவர்களை மிஸ்டர் 29 பைசா என நாம் அழைக்க வேண்டும். நீங்கள் அழைப்பீர்களா?’ என உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுப் பிரசாரம் செய்தது மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்படி தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதை நயமாகவும், நகைச்சுவையாகவும் எடுத்துரைத்த பாணி மிகப்பெரும் வரவேற்பையும் திமுக-வுக்கு ஆதரவையும் பெற்றுத் தந்தது” என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் வெயில்

அதேபோன்று, சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகனத்தில் திறந்த வெளியில் நின்று கொண்டு எந்தவிதத் தடுப்புமின்றி உதயநிதி பிரசாரம் மேற்கொண்டதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் அவர்கள், “அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை முதலில் தெரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை அறிந்து கொண்டு, தொடர்புடைய அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை, மாவட்டப் பிரநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து, அந்தப் பிரச்னைகளை தீர்த்துவைக்க முடியும் எனில், அதைப் பேசும் இடங்களில் எல்லாம் வாக்குறுதிகளாக அறிவித்து, கண்டிப்பாக அதைச் செயல்படுத்தித் தருவதாக உறுதி அளித்தது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், அவர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

திராவிட மாடல் அரசின் சாதனைகள்!

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 30, 40 ஆண்டுகளில் தீராத பட்டா மாற்றம் முதலான திட்டங்களை எல்லாம் உடனுக்குடன் முடித்து வைத்தது உட்பட பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி, திராவிட மாடல் அரசின் சாதனகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்துப் பிரசாரம் செய்தது மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும், இவையெல்லாம் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரத்தில் காணப்பட்ட தனி யுக்திகள் என்றும் வியந்து பாராட்டுகிறார்கள் அறிவாலயத்தின் கலைஞர் காலத்து சீனியர் தலைவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. Overserved with lisa vanderpump. But іѕ іt juѕt an асt ?.