கடந்த 2022 ல் ‘நான் முதல்வன்’ எனும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
பிறகு அது பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு தொழிலில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
முதல் ஆண்டில் 13 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கும், 2 ஆம் ஆண்டில் 14 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்பத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் விரிவாக்கமாக, ‘நான் முதல்வன்’ இளையா என்ற அழைப்பு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி குறித்த கேள்விகளுக்கு இளையா பதிலளிக்கும்.
எந்த மாவட்டத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்துக் கேட்டாலும் அது பதில் தரும்.
அவர்களது மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டங்களில் அளிக்கப்படும் திறன் பயிற்சி குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விபரங்களை அளிக்கும்.
இது பற்றிய விபரங்களை 044-25252626 என்ற உதவி எண் மூலமும் பெறலாம்.
இளையா திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜான்சன் எலெக்ட்ரிக், போஸ் லிமிடெட், என்எல்சி, நெட்டூர் டெக்னிகல் ட்ரெய்னிங் பவுன்டேஷன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது கூடுதல் தகவல்.