Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

பி.எச்.டி படிப்பவர்களுக்கு மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை!

பி.எச்.டி படிக்க விரும்பும் தகுதி உடைய மாணவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டு மாணவர்களின் ஆராய்ச்சித் திறமையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் கண்டுபிடிப்புத் திறனை அதிகரித்து புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் இத்தகைய ஊக்கத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் கலை, சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கென வைக்கப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் பி.எச்.டிஆய்வு மேற்கொள்ளும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மூன்றாவது ஆண்டில் மாதம் ரூ.28 ஆயிரம் வழங்கப்படும்.

தற்போது 2023-24-ஆம் ஆண்டிற்கான தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள விரும்பும் மாணாக்கர்கள், 2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கு https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

15.11.2023 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version