அதிகரிக்கும் உயிரிழப்பு: கொரோனா கால ஆன்டிபயாட்டிக்கும் தற்போதைய பாதிப்புகளும்!

மீப காலமாக இருபது, முப்பது வயதுகளில் உள்ள இளைஞர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துவிட்டு, உணவு வருவதற்காக காத்திருக்கும் போதே இளைஞர் ஒருவர், சாப்பிடும் மேஜை மீதே சரிந்து விழுந்து உயிரிழந்த வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோன்று திருமணம், பண்டிகை கால பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பலர் நன்றாக பேசி, சிரித்து ஆடிப்பாடிக் கொண்டிருக்கும்போதே, அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பான பல வீடியோக்களும் வெளியாகி இருந்தன.

கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்பா?

இத்தகைய உயிரிழப்புகளுக்கு கொரோனா காலத்தில் போட்டுக்கொண்ட தடுப்பூசிகளால் ஏற்பட்ட பின்விளைவுகளே காரணம் என்ற ரீதியில் பலரும் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். ஒரு தடுப்பூசிக்கான பின்விளைவுகளைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கான உரிய கால அவகாசத்துடன் கூடிய சோதனை செய்யப்படாமலேயே, அவசரகதியில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் புகார்கள் எழுந்தன.

ஆனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது எனவும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் தான் இதய நோய், நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உலக நுண்ணுயிர் (தீங்கு ஏற்படுத்தும்) எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது 0.001 சதவீதம் அளவிற்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட 10 லட்சம் பேரில் இரண்டு பேருக்கு பக்க விளைவுகள் அதிகமாக இருக்கலாம். கொரோனா பேரிடர் காலத்தில் அதிகளவு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டது.

சௌமியா சாமிநாதன்

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 10 பாராசிட்டமில் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கிட்னி செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே மருந்துகளை அளவுடனும் கட்டுப்பாட்டுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உலகம் முழுவதும் ஆண்டிற்கு 20 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். நுண்ணுயிர் தொற்று காரணமாக இந்தியாவில் ஆண்டிற்கு 50 ஆயிரம் பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர். இனி வரக்கூடிய காலங்களில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவக் கூடும். அதனால் எச்சரிக்கையாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

‘சளி, காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் வேண்டாம்’

மேலும், சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், பாராசிட்டாமல் மாத்திரை எடுத்துக் கொள்வதைவிட இஞ்சி, மிளகு, துளசி போன்றவற்றை எடுத்துகொண்டாலே காய்ச்சல், சளி போன்றவை குறைந்து விடும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“பாக்டீரியா தொற்று என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது. மற்ற நாடுகளில் ஆண்டிபயாட்டிக் மருந்து வழங்குவதில் கடுமையாக விதிமுறைகளை பின்பற்றுவதை போல நம் நாட்டிலும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

அவசியம் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?. 자동차 생활 이야기.