தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என மக்கள் பரபரப்பாக தீபாவளி பர்சேஷில் இறங்கிவிட்டார்கள். தொழில் நிமித்தம் சென்னை உட்பட வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்களும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டதால் எல்லா ஊர்களிலுமே மக்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகிக் கொண்டுள்ளனர்.
அதே சமயம் இந்த தீபாவளி ஒரு கொண்டாட்டத்தில் பாதுகாப்பும் முக்கியமான விஷயம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
குறிப்பாக பட்டாசு வெடிப்பதில் மிகுந்த கவனம் தேவை.
கூடவே தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- பட்டாசுகளை திறந்தவெளியில் வெடிக்கவேண்டும்.
- பட்டாசுகளை வெடிக்கும்போது நீளமான ஊதுபத்தியைப் பயன்படுத்தவேண்டும். ஊதுபத்தியைப் பற்ற வைக்க, விளக்குக்குப் பதில் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தலாம்.
- பட்டாசு வெடிக்கும்போது பருத்தியால் தயாரிக்கப்பட்ட உடை, ஜீன்ஸ் அணிவது நல்லது.
- பட்டாசுகளை வெடிக்கும்போது அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்ளவேண்டும்.
- மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- சுவாசப்பிரச்னை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
- குடிசைகளில் வசிப்போர் தீபாவளியையொட்டிய சில தினங்களுக்கு அவர்களது வீட்டுக் கூரைகளில் தண்ணீரை ஊற்றி ஈரமாக வைத்திருக்கலாம்.
- இந்த வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவோம்..!