‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசால் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்தவும், வீரர்-வீராங்கனைகளை ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களைச் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற வைப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.
தமிழ்நாட்டு வீரர்-வீராங்கனைகளை, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு, ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி இம்முறை நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ‘‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023’’-ஐ தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடக்கிறது.
இந்தப் போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலோ இந்தியா தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, ஜுடோ, கட்கா, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், சைக்கிள் ஓட்டுதல், கோ-கோ, யோகாசனம், மல்யுத்தம், ஹாக்கி, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல், களரிபயட்டு, மல்லக்கம்பு, கூடைப்பந்து, தாங் தா, கபடி மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் குழு விளையாட்டுகளில் தமிழ்நாட்டு அணியும் இடம்பெறுகிறது. இதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
கூடைப்பந்து விளையாட்டில் பங்கு பெறும் பெண்களுக்கு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 01.12.2023 காலை 7 மணிக்கு திறன் தேர்வு சோதனைகள் நடக்கும்.
கூடைப்பந்து விளையாட்டில் பங்கு பெறும் ஆண்களுக்கு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 02.12.2023 காலை 7 மணிக்கு திறன் தேர்வு சோதனைகள் நடக்கும்.
கால்பந்து விளையாட்டில் பங்குபெறும் பெண்களுக்கு சென்னை மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பூங்கா என்ற முகவரியில் 30.11.2023 அன்று காலை 7 மணிக்கு திறன் தேர்வு சோதனைகள் நடக்கும்.
கால்பந்து விளையாட்டில் பங்கேற்கும் ஆண்களுக்கும் மேற்கண்ட முகவரியில் 01.12.2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடக்கும்.
கபடிப் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை என்ற முகவரியில் 30.11.2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடைபெறும்.
கபடிப் போட்டியில் பங்குபெறும் ஆண்களுக்கு மேற்கண்ட முகவரியில் 01.12.2023 அன்று காலை 7 மணிக்குத் தேர்வு நடக்கும்.
கோ-கோ போட்டியில் பங்குபெறும் பெண்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை என்ற முகவரியில் 30.11.2023 அன்று காலை 7 மணிக்குத் தேர்வு நடக்கும்.
கோ-கோ போட்டியில் பங்குபெறும் ஆண்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை என்ற முகவரியில் 01.12.2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடக்கும்.
வாலிபால் போட்டியில் பங்குபெறும் பெண்களுக்கு, சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், 30.11.2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடைபெறும்.
வாலிபால் போட்டியில் பங்குபெறும் ஆண்களுக்கு, சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், 01.12..2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடைபெறும்.
ஹாக்கி போட்டியில் பங்குபெறும் பெண்களுக்கு, சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், 30.11.2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடைபெறும்.
ஹாக்கி போட்டியில் பங்குபெறும் ஆண்களுக்கு, சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், 01.12.2023 அன்று காலை 7 மணிக்கு தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்-வீராங்கனைகளின் திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.
திறமையை வெளிப்படுத்தக் காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு!