நாட்டுப்புற மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் ஆகியன நாட்டுப்புறக் கலைகளாகும்.
சிலம்பாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சேவையாட்டம், கழியல் ஆட்டம், வேதாள ஆட்டம், கணியான் ஆட்டம், கூத்து, கழைக் கூத்து தோற்பாவைக் கூத்து, காவடியாட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம்,பின்னல் கோலாட்டம்,தேவராட்டம், சக்கையாட்டம், சிம்ம ஆட்டம், பொடிக்கழி ஆட்டம், கரடி ஆட்டம், புலி ஆட்டம், பேய் ஆட்டம், வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, பாவைக் கூத்து
என்று நாட்டுப்புறக் கலைகள் ஏராளம்..
நாட்டுப்புறக் கலையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் நீங்களும் கற்கலாம்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையத்திலுமாக மொத்தம் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு இடத்திலும், நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தப்படும்.
இக்கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்கை 1.12.2023 முதல் தொடங்குகிறது. 1.1.2024 முதல் பயிற்சி தொடங்க இருக்கிறது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.